

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ தனது தோழி லேனா ஆண்டர்சனை திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் திருமணம் நகரை அடுத்த சீபோர்த்தில் உள்ள பிரெட் லீயின் புதிய வீட்டில் கடந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது. பிரெட் லீக்கு இது 2-வது திருமணம் ஆகும். முன்னதாக எலிசபெத்கெம்ப் என்பவரை திருமணம் செய்திருந்த பிரெட் லீ, 2008-ல் அவரை விவா கரத்து செய்தார். இவர்களுக்கு பிரெஸ்டன் என்ற மகன் உள்ளார்.
37 வயதாகும் பிரெட் லீயும், 29 வயதான லேனாவும் கடந்த ஆகஸ்ட் முதலே ஒன்றாக சுற்றித் திரிந்தனர். மேலும் நிதி திரட்டும் நிகழ்ச்சியொன்றின்போது ஒன்றாகக் கலந்துகொண்ட இவர்கள், இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.