Published : 06 Feb 2015 09:59 AM
Last Updated : 06 Feb 2015 09:59 AM

பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார்.

பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்பு பிசிசிஐ தலைவராக இருந்தவருமான சரத் பவாரும் மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே பிசிசிஐ தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிசிசிஐ செயற்கூட்டம் வரும் 8 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஆண்டு பொதுக்குழு தேதி முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்துக்கு ஒரு நாள் முன்பாக நாளை சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் 12 ம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்ற வழக்கில் கடந்த 22 ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும். ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமை யாளராக இருக்கும் சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை துறந்தால் மட்டுமே பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் போட்டியிட முடியும் என்ற நிலைமை ஏற் பட்டது.

இந்நிலையில் அவர் அருண் ஜேட்லியை சந்தித்திருப்பதன் மூலம் பிசிசிஐ தேர்தலில் அவர் களமிறங்குவது உறுதியாகி விட்டது. ஏனெனில் அருண் ஜேட்லி பிசிசிஐ தேர்தலில் போட்டியி டவில்லை. அதே நேரத்தில் பல மாநில கிரிக்கெட் சங்கங்களில் அவருக்கும் பாஜகவுக்கும் செல்வாக்கு உள்ளது. எனவே பிசிசிஐ தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக அருண் ஜேட்லி இருக்கிறார்.

ஜேட்லி சீனிவாசன் சந்திப்பின்போது ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டாம் என்றும் சீனிவாசனுக்கு ஜேட்லி ஆலோசனை வழங்கி யுள்ளார்.

அப்போது, பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்பதற் கான நடவடிக்கையை தொடங்கி விட்டதாக அருண் ஜேட்லியிடம் சீனிவாசன் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x