

ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
‘உலகக் கோப்பையில் கேப்டன் யார், என்பதை அணி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். ஸ்மித்தை கேப்டனாக நியமித்தால் அவரது தலைமையில் விளையாட நான் தயாராக இருக்கிறேன்’ என்று கிளார்க் கூறினார்.
காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க போராடி வரும் அவர், அணியில் ஒரு வீரராக கிடைக்க விளையாட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது.