

இந்திய பந்து வீச்சாளர்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்திய பந்துவீச்சில் முன்னேற்றம் இல்லை. யார்க்கர்களை வீசாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வருகின்றனர். இந்திய பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை என்றே நினைக்கிறேன்.
ஆனால் அதை அவர்களால் மாற்ற முடியும். அதற்காக நேரம் இன்னும் இருக்கிறது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.