Published : 04 Feb 2015 05:19 PM
Last Updated : 04 Feb 2015 05:19 PM

மைக்கேல் கிளார்க் அணியை வழி நடத்துவார்: பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி

உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை மைக்கேல் கிளார்க் வழிநடத்துவார் என்று கூறி டேரன் லீ மேன் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காயமடைந்த மைக்கேல் கிளார்க் தற்போது உடல்நிலையில் தேறி ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை போட்டிகளில் வழிநடத்துவார் என்று பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி அளித்துள்ளார்.

"ஒரு அணியாக எங்களுக்குத் தெரியும், மைக்கேல் கிளார்க் அவர் விளையாடுவார். நாங்கள் அவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம். அவர் அணியின் தலைவர், அவர்தான் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்திச் செல்வார்.

கடந்த 23 ஒருநாள் போட்டிகளில் 19 போட்டிகளில் வென்றுள்ளோம். ஆகவே அணி நல்ல நிலையில் உள்ளது. அவரவர்கள் தங்கள் கருத்தைக் கூற உரிமையுண்டு, ஆனால் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு அணியாக எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அணித் தலைவராக அவர் தேவை, அவர்தான் கேப்டன்சி செய்யப் போகிறார்.” என்று மைக்கேல் கிளார்க் உறுதிபட கூறியுள்ளார்.

பிரிஸ்பன் மைதானத்தில் மைக்கேல் கிளார்க் பேஸ்பால் மட்டையுடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். பந்துகள் அவருக்கு த்ரோ செய்யப்பட்டன என்றும் அத்தனை பந்துகளையும் அவர் அடித்து நொறுக்கினார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“பேஸ்பால் மட்டையில் விளையாடும் போது பந்துகளை நெருக்கமாக பார்க்கும் பயிற்சி ஏற்படுகிறது. நான் இதனை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறேன். பயிற்சிக்கு இது மிகச்சிறந்தது.” என்று கிளார்க் கூறியதாக அந்த பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

கட்டுப்பாடற்ற ஆக்ரோஷத்தைக் கிளார்க் காண்பித்து ஆடியதாகவும் ஒரு பந்து கிரெக் சாப்பல் நெஞ்சில் பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது கிரெக் சாப்பல், கிளார்க் அடித்த ஷாட் தன் மார்பை நோக்கி வருகிறது என்று தெரிந்து நகர முயற்சி செய்தார், ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x