

கிரிக்கெட் போட்டி நடத்த தடை செய்யப்பட்ட இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டியை நடத்துவது ஏன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
2000-ம் ஆண்டில் சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதை அடுத்து அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்தியா தடை விதித்தது. இந்நிலையில் இப்போது ஐபிஎல் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்று நகரங்களில் சார்ஜாவும் இடம் பெற்றுள்ளது. எனவே விளையாட்டு அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டிக்கு விளையாட் டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஐபிஎல் போட்டியை நடத்த பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்ந் தெடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும். வழக்கமாக கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடுகளை ஒதுக் கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, வங்க தேசம் ஆகிய நாடுகளும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவற்றை ஒதுக்கிவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸை பிசிசிஐ தேர்ந்தெடுத்தது. ஸ்பாட் பிக்ஸிங், கிரிக்கெட் சூதாட்டம் போன்றவை ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்துதான் அதிகம் நடை பெறும்.
கடந்த முறை இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றபோதே ஐபிஎல்-லில் சூதாட்டமும், மேட்ச் பிக்ஸிங்கும் நடைபெற்றது. இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால் சூதாட்டம், ஸ்பாட் பிக்ஸிங் போன்ற முறை கேடுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று கருதப் படுகிறது.