ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்
Updated on
1 min read

ஒருநாள் போட்டிகளில் அனைத்து காலத்திலும் சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலை விவ் ரிச்சர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) இணையதளத்தில் ரிச்சர்ட்ஸ் எழுதிய பத்தியில் இது பற்றி கூறும்போது, “என்னுடைய மனதிற்கு முதலில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அவர் ஒரு லெஜண்ட். சச்சின் எப்போதுமே நான் பார்க்க விரும்பும் ஒரு பேட்ஸ்மென், நான் பணம் கொடுத்து ஒருவர் ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன் என்றால் அது சச்சினுடைய ஆட்டத்தைத்தான்.

மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல் இவர் பெரிய உருவம் படைத்தவர் அல்ல. மூர்த்தி சிறிதென்றாலும் சச்சினின் கீர்த்தி பெரிது.

அதே போல் சச்சினுக்கு சரிசமமாக பிரையன் லாராவையும் வைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் நான் விராட் கோலியை கடைசி பெயராக வைத்துள்ளேன். இவர் பெயரை சேர்த்தது பலரையும் ஆச்சரியப்படுத்தலாம், ஏனெனில் அவர் இளம் வீரர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. ஆனால், எனது கண்ணோட்டத்தில் இவர் ஏற்கெனவே சாதனையாளர்தான். அவர் மேன்மேலும் சிறப்பு சேர்க்கக் கூடியவர். நிறைய சாதனைகள் இவரது பெயருக்குப் பின்னால் காத்திருக்கிறது.” என்று அந்த பத்தியில் அவர் கூறியுள்ளார்.

ரிச்சர்ட்ஸின் டாப் ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் உள்ள மற்ற வீரர்கள்:

கிறிஸ் கெய்ல், கிளைவ் லாய்ட், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஹஸ்ஸி, விரேந்திர சேவாக், ஏ.பி.டிவிலியர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in