

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சு நுட்பங்களை கற்றுக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன்.
அதே நேரத்தில் இப்பணியை என்னால் முழு நேரமாக ஏற்க முடியாது. ஏனெனில் உலகம் முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.