பெரிய ஷாட்களை ஆடிய தோனி: தீவிர பயிற்சியில் இந்திய அணி

பெரிய ஷாட்களை ஆடிய தோனி: தீவிர பயிற்சியில் இந்திய அணி
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள விவரங்களில் சில:

வலைப்பயிற்சியில் இந்திய கேப்டன் தோனி ‘பிக் ஹிட்டிங்’ பயிற்சி மேற்கொண்டார். பிறகு உலகக்கோப்பை தொடக்க விழாவுக்காக முன்னதாகவே மெல்போர்ன் புறப்பட்டார்.

அடிலெய்டில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

குறிப்பாக பந்துவீச்சில் யார்க்கர்களை வீசுவதற்கான முனைப்பு தெரிந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொகமது ஷமி, தவால் குல்கர்னி ஆகியோர் கடும் பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக தவால் குல்கர்னி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்ட்டார். எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

வழக்கமான பேட்டிங், பவுலிங் பயிற்சிகளுக்குப் பிறகு கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீரருக்கும் 5 ஹை கேட்ச்கள் என்ற வீதத்தில் கேட்சிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இவையனைத்திலும் ரவிசாஸ்திரி, மற்றும் துணைப்பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், ஆட்டங்களில் எப்படி பீல்டிங் அமைப்பார்களோ அந்த வகையில் அமைத்து பந்துவீச்சு செய்து, பீல்டிங், கேட்சிங் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சி ஆட்டங்களில் இந்திய அவுட் ஃபீல்டிங்கில் எளிதான கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டதையடுத்து பீல்டிங் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபப்ட்டுள்ளது.

பவுலிங் பயிற்சியாளர் பி.அருண், நடுவர் நிற்பது போல் நின்று கொண்டு பவுலர்களின் நோ-பால் மற்றும் லைன், லெந்த் ஆகியவை பற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து நாளையும் கடுமையான பயிற்சிகள் மெற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in