ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரிக்ஸ் ஷரபோவா சாம்பியன்

ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரிக்ஸ் ஷரபோவா சாம்பியன்
Updated on
1 min read

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தொடர்ந்து 3-வது ஆண்டாக வெற்றி பெற்று அவர் சாதனை படைத்துள்ளார்.

இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் அனா இவானோவிச்சை ஷரபோவா எதிர்கொண்டார். முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இவானோவிச் வென்றார். இதையடுத்து ஆக்ரோஷமாக விளையாடிய ஷரபோவா 6-4,6-1 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த ஆண்டில் ஷரபோவா வென்றுள்ள முதல் பட்டம் இது. ஒட்டுமொத்தமாக அவர் வென்றுள்ள 30-வது பட்டம் இது. ஸ்டட்கார்டில் நடைபெறும் போட்டியில் தொடர்ந்து 13-வது வெற்றியை அவர் பெற்றுள்ளார்.

தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷரபோவா கடந்த ஆண்டில் 4 மாதமாக விளையாடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வியடைந்தது.

இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாரா எர்ரானி ராபர்டா வின்ஸி ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தியது. சானியா ஜோடி இந்த ஆட்டத்தில் வென்று இருந்தால் இந்த ஆண்டின் முதல் பட்டமாக அமைந்திருக்கும். இதற்கு முன்பு இண்டியன் வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் சானியா ஜோடி தோல்வியடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in