

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம், இந்தியா சிமென்ட்ஸின் துணை நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட் என்ற துணை நிறுவனத்துக்கு சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் மாற்றப்பட்டுள்ளது.
துணை நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இதன் உரிமம் வழங்கப்படுகிறது. இம்முடிவு கடந்த செப்டம் பரில் எடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இப்பரிந்துரையை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்கு நர் குழு நேற்று ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பிசிசிஐ, ஐபிஎல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த கூடுதல் விவரங்களை அளிக்க இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவ ரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீநிவாசன் மறுத்துவிட்டார்.