Last Updated : 10 Feb, 2015 06:38 PM

 

Published : 10 Feb 2015 06:38 PM
Last Updated : 10 Feb 2015 06:38 PM

இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டியை தூர்தர்ஷனில் காணலாம்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகளை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்வது மீதான தடையை நீக்கி உச்ச நீதீமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை ரசிகர்கள் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாகப் பார்க்க முடியும்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை தற்காலிகமாக நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு மீதான நீக்கம் பிப்.17ஆம் தேதி வரை நீடிக்கும், அன்றைய தினம் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு இலவசமாக வழங்கினால் எங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் எனவே துர்தர்ஷன் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஈஎஸ்பின் மற்றும் ஸ்டார் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய துர்தர்ஷனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இன்று இந்த தடை உத்தரவை இடைக்கால நீக்கம் செய்தது உச்ச நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x