

தமிழக-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 169.5 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய விதர்பா அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. அந்த அணியில் கட்டாரியா 42, பத்ரிநாத் 40, ஸ்ரீவஸ்தவா 39 ரன்கள் எடுத்தனர்.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 90.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணி இன்னும் 197 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.