

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடை பெறவுள்ளது.
எனினும் மார்சியா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்பேனில் இன்றும் 70 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் தாக்கம் குறைந்தால் ஓவர்களை குறைத்து டி20 போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளார். எனினும் வருணபகவான் வழிவிட்டா லொழிய கிளார்க் விளை யாட முடியாது.
ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமானால் அது கோப்பையை வெல்லும் வாய்ப் புள்ள அணியாகக் கருதப் படும் ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமாக அமையும். அந்த அணி வங்கதேசத்துடன் புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதுவரை வங்கதேசத்துக்கு எதிராக 18 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.