ஐரோப்பா தொடர்: இந்தியாவுக்கு 2-வது தோல்வி

ஐரோப்பா தொடர்: இந்தியாவுக்கு 2-வது தோல்வி
Updated on
1 min read

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஹாக்கி அணி 2-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது.

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் மே 31 முதல் ஜூன் 15 வரை நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெறவுள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் தி ஹேக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி கண்டது. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய நெதர்லாந்து முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 37 மற்றும் 40-வது நிமிடங்களில் முறையே இந்திய வீரர் உத்தப்பா, கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் கோலடித்தபோதும், தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.

முன்னதாக 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய அணி, இப்போது 2-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை மீண்டும் சந்திக்கிறது இந்தியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in