மாநில கூடைப்பந்து: சென்னை அணிகள் வெற்றி

மாநில கூடைப்பந்து: சென்னை அணிகள் வெற்றி
Updated on
1 min read

நாமக்கல் கூடைப்பந்து சங்கம் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், பெண்கள் பிரிவில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியும் வெற்றி பெற்றன.

கடந்த 28-ம் தேதி தொடங்கிய இப்போட்டி லீக் முறையில் நடை பெற்றது. ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி யும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் மோதின.

சாம்பியன் பட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 73-க்கு 65 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை இந்தியன் வங்கி அணி 2-ம் இடத்திலும், சென்னை ஜே.பி.ஆர். கல்லூரி அணி மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ரைசிங் ஸ்டார் அணி 59-க்கு 39 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வெற்றது. சென்னை ஸ்லாமர்ஸ் அணி மூன்றாமிடம் பெற்றது. முதல் பரிசு தலா ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம், 4-வது பரிசு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

சிறந்த வீரருக்கான பரிசை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வீரர் விவேக்கும், சிறந்த வீராங்கனைக்கான பரிசை ரைசிங் ஸ்டார் அணி திவ்யாவும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் நாமக்கல் கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன், நிர்வாகிகள் கந்தகுமார், பாண்டியராஜ், முரளி, சதீஷ், பரத், அம்மையப்பன், ராமகிருஷ்ணன், பாஸ்கர், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in