

நாளை பெர்த்தில் நடைபெறும் யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி விளையாட மாட்டார்.
இடது முழங்கால் காயம் காரணமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை இந்திய அணியின் ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா தெரிவித்தார்.
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் மொகமது ஷமி.
இவருக்குப் பதிலாக புவனேஷ் குமார் அல்லது ஸ்டூவர்ட் பின்னி அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.