

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸி.-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து வீர்ர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு கொடுத்த ரன் அவுட் தீர்ப்பு தவறுதான் என்று ஐசிசி. ஒப்புக்கொண்டது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
குரூப் ஏ ஆட்டமான இங்கிலாந்து-ஆஸ்திரேலிய போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆட்டத்தின் கடைசி பந்தை பிளேயிங் கண்ட்ரோல் டீம் ஆய்வு செய்தது.
நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) ஆட்டச்சூழ்நிலைகள் விதிமுறை பிரிவு 3.6ஏ-யின் படி கள நடுவர் ஒருமுறை அவுட் என்று தீர்ப்பளித்து விட்டால் பந்து உடனே தனது செயலை இழந்து விடுகிறது. அது டெட் பால். ஜேம்ஸ் டெய்லருக்கு எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்ட பிறகே அடுத்ததான ரன்கள் அல்லது அவுட்கள் சாத்தியமில்லை.
இந்நிலையில் பிளேயிங் கண்ட்ரோல் டீம் இங்கிலாந்து அணி நிர்வாகத்தைச் சந்தித்து ஆட்டம் தவறாக முடிக்கப்பட்டது என்றும் பிழை ஏற்பட்டுவிட்டது என்றும் ஒப்புக் கொண்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.