கிரானைட் ஓபன்: காலிறுதியில் தீபிகா, ஜோஷ்னா

கிரானைட் ஓபன்: காலிறுதியில் தீபிகா, ஜோஷ்னா
Updated on
1 min read

கிரானைட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கனடாவின் டோரன்டோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள தீபிகா பலிக்கல் 8-11, 11-8, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் வேல்ஸின் தேஸ்னி இவான்ஸை தோற்கடித்தார்.

தீபிகா தனது காலிறுதியில் இங்கிலாந்தின் ஜென்னி டங்காஃபை சந்திக்கவுள்ளார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அபாரமாக ஆடிய ஜோஷ்னா சின்னப்பா 11-8, 11-8, 11-6 என்ற நேர் செட்களில் கனடாவின் வைல்ட்கார்ட் வீராங்கனையான நிக்கி டோடை தோற்கடித்தார். ஜோஷ்னா, தனது காலிறுதியில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ரஹேல் கிரின்ஹாமை சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in