இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் தீர்ந்தன

இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் தீர்ந்தன
Updated on
1 min read

உலகக்கோப்பை போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்களில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஐசிசி இணையதளச் செய்திகளின் படி, “ஞாயிற்றுக் கிழமை (8ஆம் தேதி) அடிலெய்டில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

அதே போல் பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையே சிட்னியில் 9ஆம் தேதி நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. டிக்கெட்டுகள் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.” என்று கூறியுள்ளது.

அதாவது பயிற்சி ஆட்டங்களைக் காண கட்டணம் கிடையாது என்றாலும், முறையான டிக்கெட்டுகளுடன் மைதானத்திற்கு வருவது அவசியம் என்று கூறியுள்ளது ஐசிசி.

8ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா, பிப்ரவரி 10-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்த்து விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in