

ஜூரிச் செஸ் கிளாசிக் போட்டியில் 4-வது சுற்றின் முடிவில் இந்தியா வின் விஸ்வநாதன் ஆனந்த் தனி முன்னிலை பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளை எட்டிய ஆனந்த் தனி முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நாகமுரா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
மற்ற 4-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ரஷ்யா வின் விளாடிமிர் கிராம்னிக், சகநாட்டவரான செர்ஜி கர்ஜாகி னுடனும், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன் இத்தாலியின் ஃபாபியானோ கருணாவுடனும் டிரா செய்தனர்.
வெற்றி குறித்துப் பேசிய ஆனந்த், “இங்கு என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியளிப்பதாக உள் ளது. வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடியபோது கிடைத்த இரு வெற்றிகளும் மனநிறைவு அளிக்கிறது” என்றார்.