யோகா பயிற்சி எடுத்துக் கொண்ட விராட் கோலி, ரவி சாஸ்திரி
இந்திய அணி இயக்குநர் ரவி சாஸ்திரி மற்றும் துணைக் கேப்டன் விராட் கோலி தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மையம் ஒன்றில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி கூறியதை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய இணையதளம், “மிகப்பிரமாதம். அந்த மையத்தின் அமைப்பு மிகவும் உற்சாகமளித்தது. நல்ல ஓய்வுக்கு வழி வகுத்தது.
2 மாதகால ஆஸ்திரேலிய பயணம் மனச்சோர்வை உருவாக்கக் கூடியது. எனவே நிம்மதியான ஓய்விடம் தேவை, அதற்கு இந்த மையம் மிகச்சிறந்தது. இது உடல் ரீதியான தயாரிப்பை உருவாக்குகிறது என்பதை விட மன ரீதியாக வீர்ர்களைக் கூர்மைப்படுத்தும் என்றே நான் கருதுகிறேன்.”
என்று செய்தி வெளியிட்டுள்ளது.
விராட் கோலி, ரவி சாஸ்திரி மன அமைதியைத் தேடி யோகா பயிற்சி மையம் செல்ல மற்ற வீரர்கள் சாகச முகாமில் தங்கள் நேரத்தைச் செலவழித்ததாக அந்த ஆஸ்திரேலிய இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
