கிரென்கெ செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்ஸன் சாம்பியன்

கிரென்கெ செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்ஸன் சாம்பியன்
Updated on
1 min read

ஜெர்மனியில் நடைபெற்ற கிரென்கெ கிளாசிக் செஸ் தொடரில், நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்ஸன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜெர்மனியின் படென் படென் நகரில் சர்வதேச கிளாசிக் செஸ் தொடர் கடந்த 2-ம் தேதி தொடங் கியது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 8 வீரர்கள் 7 சுற்றுகளில் மோதினர். 7-வது சுற்று முடிவில் நார்வேயின் கார்ல்ஸன், ஜெர்மனியின் அர்கதிஜ் நெய்டிட்ச் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து, வெற்றி யாளரைத் தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு ரேபிட் ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலை வகித்தனர். இரண்டு பிளிட்ஸ் ஆட்டங்கள் நடத்தப்பட்டதில், இரண்டுமே டிராவில் முடிவடைந் ததால் தொடர்ந்து சமநிலை வகித் தனர்.

பின்னர், அதி விரைவு ஆட்டம் (அர்மகெடான்) நடத்தப்பட்டது. இதில், கார்ல்ஸன் 32-வது நகர்த்த லில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக, 7-வது சுற்றில் பிரான்ஸின் பேக்ராட்டை எதிர்கொண்ட கார்ல்ஸன் அவரை வெற்றி கொள்ள இயலவில்லை.

டிரா மட்டுமே செய்ய முடிந்தது. பேக்ராட்டை வென்றிருந்தால் கார்ல்ஸன் நேரடியாக அதிக புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பார்.

அதேபோன்று, 7-வது சுற்றில் இத்தாலியின் கருவானா பேபியானோ ஜெர்மனியின் டேவிட் பெராமிட்ஸை வீழ்த்தியிருந்தால் 4.5 புள்ளிகளுடன் அவரும் கார்ல்ஸென் மற்றும் நெய்டிட்ச் ஆகியோருக்குப் போட்டியாக வந்திருப்பார்.

ஆனந்த் 7-வது இடம்

இத்தொடரில் பிரிட்டனின் மைக்கேல் ஆடம்ஸ் 4 புள்ளி களுடன் மூன்றாவது இடமும், இத்தாலியின் கருவானா பேபியானோ 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், ஆர்மீனியாவின் அரோனியன் லெவோன் 3.5 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், பிரான்ஸின் பேக்ராட் 3.5 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், ஜெர்மனியன் டேவிட் பாராமிட்ஸ் 1.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர்.

இப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஒரு சுற்றில் மட்டும் வெற்றி பெற்று 2.5 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தார்.

அர்மகெடான் முறை

டைபிரேக்கர் முறைகளில் அர்மகெடான் முறையில் நிச்சயம் வெற்றி தோல்வி தெரிந்து விடும். ஏனெனில் இப்போட்டியில் கறுப்புக் காய்களுடன் விளையாடுபவர் போட்டியை டிரா செய்தாலே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

அதற்கு ஈடாக, வெள்ளை நிற காய்களுடன் விளையாடுபவர்க்கு கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்படுகிறது. அதாவது வெள்ளைக் காய் களுடன் விளையாடுபவருக்கு 6 நிமிடங்களும், கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடுபவருக்கு 5 நிமிடங்களுக்கும் வழங்கப்படு கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in