பார்முலா 1 கார் பந்தயம் சச்சின் பஹ்ரைன் பயணம்

பார்முலா 1 கார் பந்தயம் சச்சின் பஹ்ரைன் பயணம்
Updated on
1 min read

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பார்முலா 1 கார் பந்தயத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஆண்டுகாண பார்முலா 1 பந்தயத்தின் 3-வது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. இதனை நேரில் கண்டு களிப்பதற்காக சச்சின் பஹ்ரைன் சென்றுள்ளார்.

பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலிபா, இப்போட்டியை காண சிறப்பு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு சச்சினுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபது ஓவர் உலகக் கோப்பை யில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்குச் சென்றுள்ளது. அப்போட்டியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டை தவிர்த்து விட்டு கார் பந்தய போட்டியைக் காண சச்சின் சென்றிருப்பது ரசிகர்களிடையே சற்று வியப்பையும் ஏற்படுத் தியுள்ளது.

சச்சினுக்கும் கார் பந்தயத் துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. டான் பிராட்மேனின் 29 சதங்கள் என்ற சாதனையை 2002-ம் ஆண்டில் சச்சின் சமன் செய்தபோது ஜெர்மனி கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் பெராரி காரை சச்சினுக்கு பரிசாக அளித்தார். 2011-ம் ஆண்டில் இண்டியன் கிராட் பிரிக் பார்முலா 1 கார் பந்தயத்தை சச்சின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in