Published : 05 Jan 2015 10:31 AM
Last Updated : 05 Jan 2015 10:31 AM

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பெங்கால் மோதல்

தமிழ்நாடு பெங்கால் இடையிலான ரஞ்சி போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. 8 புள்ளிகள் பெற்று, பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள தமிழகம் இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏ பிரிவில், தமிழக அணி 4 ஆட்டங்கள் ஆடி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்திலும் பெங்கால் 3 ஆட்டங்கள் ஆடி 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x