Last Updated : 30 Jan, 2015 07:30 PM

 

Published : 30 Jan 2015 07:30 PM
Last Updated : 30 Jan 2015 07:30 PM

337 ரன்கள் குவித்தார் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல்; கர்நாடகா 719 ரன்கள்

பெங்களூருவில் நடைபெறும் உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 337 ரன்களைக் குவித்து சாதனை புரிந்துள்ளார்.

இதன் மூலம் ரஞ்சி டிராபியில் முச்சதம் அடித்த முதல் கர்நாடகா வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் கே.எல்.ராகுல். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே அருமையான சதம் ஒன்றை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 667 நிமிடங்கள் ஆடிய ராகுல் 448 பந்துகளில் 47 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 337 ரன்கள் குவித்து 2ஆம் நாளான இன்று ஆட்டமிழந்தார்.

கர்நாடகா அணி 719 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்துள்ளது.

ஆனால், ஒன்றை இங்கு குறிப்பிடுவது அவசியம், இந்த மலை போல் ரன்குவிப்பிலும் உ.பி. பவுலரும் முன்னாள் இந்திய பவுலருமான பிரவீண் குமார் 36 ஓவர்கள் வீசி 10 மைடன்களுடன் 88 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது சாதாரண விஷயமல்ல.

இந்திய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர்கள் வருமாறு:

பி.பி.நிம்பால்கர் - 443 ரன்கள்

சஞ்ஜய் மஞ்சுரேக்கர் - 377 ரன்கள்

எம்.வி. ஸ்ரீதர் (ஐதராபாத்)- 366 ரன்கள்

விஜய் மெர்சண்ட்- 359 ரன்கள்

விவிஎஸ். லஷ்மண்- 353 ரன்கள்

புஜாரா - 352 ரன்கள்.

சுனில் கவாஸ்கர் - 340 ரன்கள்

ராகுல் - 337 ரன்கள்

ரவீந்தர் ஜடேஜா- 331 ரன்கள்

கேதர் ஜாதவ் - 327 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x