

2015 உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இந்திய அணியைத் தேர்வு செய்தனர். இதில் கபில் தேர்வு செய்த அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை.
அஸ்வினுக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் கரன் சர்மாவுக்கு அவர் முன்னுரிமை அளித்துள்ளார்.
அதே போல் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக ராபின் உத்தப்பாவை கபில் தனது உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளார். இதனால் ஸ்டூவர்ட் பின்னிக்கு அவரது அணியில் இடமில்லை.
கபிலின் உலகக் கோப்பை அணி: ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா, ராயுடு, உத்தப்பா, ஜடேஜா, அக்சர் படேல், கரன் சர்மா, புவனேஷ் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.
இன்று பிசிசிஐ தேர்வு செய்த அதே அணியை ராகுல் திராவிட் அணி அறிவிக்கப்படும் முன்பே சரியாகக் கணித்தார்.
கங்குலி தேர்வு செய்த உலகக் கோப்பை அணியில் அக்சர் படேல் இல்லை மாறாக வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னிக்கு முன்னுரிமை அளித்தார்.
கவாஸ்கர் தேர்வு செய்த உலகக் கோப்பை அணியில் இசாந்த் சர்மாவுக்குப் பதில் ஹரியாணா வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா இடம்பெற்றுள்ளார், மற்றபடி அதே அணிதான்.