Last Updated : 15 Jan, 2015 11:55 AM

 

Published : 15 Jan 2015 11:55 AM
Last Updated : 15 Jan 2015 11:55 AM

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தப் படை போதுமா?

இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் காதலர் தினம். இந்த ஆண்டு, இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், சிறியவர், பெரியவர் என எல்லா தரப்பையும் சேர்ந்த கோடிக்கணக் கானோர் அந்நாளினை மேலும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்தி ருக்கின்றனர். காரணம், நான்காண்டு களுக்கு ஒரு முறை நடக்கும் உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்குத் தனி அந்தஸ்து உள்ளபோதிலும், ஒரு நாள் உலகக்கோப்பைக்கு இருக்கும் மவுசு தனி.

ஒரு நாள் உலகக்கோப்பை போட் டியில் விளையாடுவதை மிகவும் கவுரவமாக கருதுவதால், எப்படி யாவது அணியில் இடம்பெற்றுவிட வேண்டுமென் பதே வீரர்களின் எண்ணமாக இருக்கும். ஆஸ்தி ரேலியா-நியூசிலாந்தில் நடைபெற வுள்ள இப்போட்டிகளுக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்திய அணி, பல பிரபல வீரர்களின் உலகக் கோப்பை வாழ்க்கைக்கு ‘குட்பை’ சொல்லியிருக்கிறது.

அனுபவத்தினைக் கருத் தில் கொண்டு அணியில் இடம்பிடிப் பார்கள் என்று கருதப்பட்ட சேவாக், கம்பீர், யுவராஜ்சிங் போன்றோர் அணியில் இடம்பெறாமல், இளம் வீரர்களைக்கொண்ட அணி தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்க ளது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை யும். அதிர்ச்சியையும் அளித்திருக் கிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த உலகக்கோப்பைப் போட் டியை மீண்டும் வென்ற இந்தியா, இம்முறை முழுக்க, முழுக்க இளம் வீரர்களைக் கொண்டுள்ளது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்த அணியால், உலகக் கோப்பையைத் தக்க வைக்க முடியுமா? என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தோனி தலைமையிலான உலகக்கோப்பை அணியில் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகம்மது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில், தோனி, கோலி, ரெய்னா மற்றும் அஸ்வின் ஆகியோர் தவிர, மற்ற 11 பேரும் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகின் றனர். சச்சின் ஏற்படுத்திய வெற்றி டம், கடந்த உலகக்கோப்பையின் ஹீரோ யுவராஜ் சிங், மேலும் சில மூத்த வீரர்கள் இல்லாத இந்த இளம்வீரர்கள் நிறைந்த அணி உலகக்கோப்பையில் சாதிக்குமா?

இந்த அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலானோர், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு நாள் அணியில் தொடர்ந்து இடம்பெற்று, நன்கு பரிமளித்து வருபவர்கள். இவர்களில் ஷிகர் தவன், அம்பதி ராயுடு, ரஹானே போன்ற இளம் அறிமுகங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாகவே, ரஞ்சிப் போட்டியில் ஹாட்ரிக் சதம் கண்டும், ரசிகர்கள் கடுமையாக கோரிக்கை விடுத்தும், கடந்த உலகக்கோப்பையின் ஹீரோவான யுவராஜ் சிங்கால் அணியில் இடம்பிடிக்கமுடியவில்லை.

இதுபோல், தொடக்க ஆட்டக் காரர்களான ஷிகர் தவனும், ரோஹித் சர்மாவும் ஒரு நாள் போட்டி களில் தொடர்ந்து சிறப்பாக ஜொலித்துவருவதால், உள்ளூர் போட்டிகளில் பரிமளித்து வந்த போதிலும் கம்பீரால் அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போய் விட்டது.

மூத்தவீரர்களில் ஒரு வரான ஜாகீர் கான் தோள் பட்டை காயத்திலிருந்து மீளாத தாலும், ஹர்பஜன் சிங் சமீப காலமாக போட்டிகளில் சரிவர பங்கேற்காததாலும், அவர் களைப் பற்றி விவாதிக்கவே தேர் வாளர்களுக்கு அவசியம் ஏற்பட் டிருக்காது. இடக்கை ஆட்டக்கார ரான அம்பதி ராயுடுவை பொறுத்த வரை தேவைப்பட்டால் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது கூடுதல் சிறப்பு. இதனால்தான் தோனியின் நண்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ராபின் உத்தப்பாவுக்கு கூட இடம் கிடைக்க வில்லை.

தோனி காரணமா?

இந்த அணியில் சீனியர்களுக்கு இடம் கிடைக்காததற்கு தோனியும் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருதினாலும், தான் கடைசியாக பங் கேற்கும் உலகக்கோப்பை போட்டி யில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் மற்றவர்களைவிட அவ ருக்கு சற்று அதிகமாகவே இருக் கும் என்று நம்பலாம். மேலும், 7 ஆண்டுகளாக அணியை வழி நடத்திவரும் அவருக்கு, ஆஸ் திரேலிய சூழலில் நன்கு ஆடக் கூடிய, தற்போது உடல்தகுதியுடன் இருக்கக்கூடிய இந்திய வீரர் களைப் பற்றி தெரியாமலாபோகும்? அதனால் அது போன்ற சிந்தனை களை மூட்டை கட்டிவைக்கலாம்.

மேலும், மற்றெந்த அணிக் கும் கிடைக்காத வாய்ப்பாக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 11 முக்கிய வீரர் கள் கடந்த இருமாதகாலமாக ஆஸ் திரேலியாவில் ஆடிவருகின்றனர். அதனால் அங்குள்ள மைதா னங்களைப் பற்றியும் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என்பது போனஸ்.

இதுதவிர, ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்துடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் இந்த அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பைக்கு தயாராக இதைவிட நல்ல வாய்ப்பு வேறெந்த அணிக் குக் கிடைக்கும்? அலெஸ்டர் குக் கழற்றி விடப்பட்டு, புதிய கேப்டன் இயான் மார்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்தை இந்த ஒருநாள் தொடரில் தோற் கடிக்கவேண்டும்.

உலகக்கோப்பையில் காலிறுதி யில் நம்முடன் இங்கிலாந்து மோத வாய்ப்புள்ளதால், இத்தொடரில் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் அடி பின்னர் மனரீதியாக அவர் களுக்கு நெருக்க டியைக் கொடுக் கும். உலகக் கோப்பையில் நமக்கு பிரச் சினை என்று பார்த்தால், பவுலிங்கில்தான் ஏற்பட வாய்ப் புள்ளது. ஸ்டெயின், மிட்செல் ஜான்சன், மோர்கல் அளவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத போதும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி போன்றோர் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதன் மூலம் கற்ற பாடம், தோனி மற்றும் அணிப் பயிற்சியாளர் பிளெட்சர் மற்றும் மேலாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நிச்சயம் வழிகாட்டுவர்கள் என்பதால் நம்மை கைவிடமாட்டார்கள் என்று நம்பலாம்.

இதுதவிர, மிதவேகப் பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான ஸ்டூவர்ட் பின்னி, அணியில் இடம் பிடித்திருப்பது ஆஸ்திரேலிய களங் களில் உதவிகரமாக இருக்கும். உலகக்கோப்பையில் ஆடிய முதல் இந்திய தந்தை- மகன் ஜோடி (தேர்வுக்குழுவிலுள்ள ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி) என்ற பெருமையுடன் களமிறங்கும் பின்னி, நடுவரிசை பேட்டிங்கை வலுப்பெறச் செய்வதோடு மட்டு மின்றி, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு.

அதனால் நமது பலமான ஸ்பின்னர்கள் ஒரு வரை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள தோனிக்கு வாய்ப்பு கிடைக் கும். இதுபோல், ஸ்விங் பவுலர் புவனேசுவர் குமார், அஸ்வின் ஆகியோரும் பின் வரிசை பேட்டிங்குக்கு வலுசேர்ப் பார்கள். அனேகமாக, இரு வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல் ரவுண்டர், இரு ஸ்பின்னர்கள் (அஸ்வின், ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல்) என்ற பார்முலாவை தோனி பயன்படுத்துவார் என்றும், அஸ்வினை முதல் ஓவர் வீசவும் அனுமதிக்கக்கூடும் (1992 கோப்பை யில் நியூசிலாந்து அணியில் தீபக் படேல் வீசியதைப் போல்) என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறும் முகம்

டெஸ்ட் அணியாக சரியாக பரிமளிக்காவிட்டாலும், ஒருநாள் போட்டி, இருபது ஒவர் என்று வந்துவிட்டால் இந்திய அணியின் தோற்றமே அச்சுறுத்தும்வகையில் மாறிவிடும். உதாரணத்துக்கு, டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் கடுமையாகத் தோற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, அதற்கு அடுத்ததாக நடந்த இருபது ஓவர் ஆட்டத்தில் தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்றிருப்பதை, அதுவும் உலகசாதனை துரத்தல் மூலம் அடைந்திருப்பதுடன் ஒப்பிடலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, லீக் போட்டிகளில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுடன் மட்டுமே நியூசிலாந்தில் இந்தியா ஆடுகிறது. மற்ற முக்கிய லீக் போட்டிகளில் சற்று பழகிவிட்ட ஆஸ்திரேலிய களங்களில் நடப் பதும் இந்தியாவுக்கு சாதக மாக அமையலாம்.கடந்த 2007-ம் ஆண்டில், மேற் கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளி யேறியது. ஆனால், அப்போது அணியில் ஏராளமான சீனியர் வீரர்கள் அணியில் இருந்தனர்.

இருப்பினும் பயிற்சியாளர் கிரெக் சாப்பலின் தாக்கத்தால் ‘டிரெஸ்ஸிங் ரூமில்’ வீரர்கள் நிம்மதி யான மனநிலையில் இல்லாததால் சோபிக்கத் தவறியதாக கருத்து நிலவியது. அப்போட்டிகளில் பங் கேற்றவர்களுள் இம்முறை உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒரே வீரர் கேப்டன் தோனி.

அவர், நாட்டில் தற்போது சிறப்பாக விளங்கும் 15 வீரர்களாக தேர்வாளர்கள் (அவரும்தான்) கருதும் அணியைப் பெற்றிருப்பதாலும், டங்கன் பிளெட்சர் மற்றும் ரவிசாஸ்திரி போன்ற பக்கத்துணையாக இருக் கும் அணிநிர்வாகமும், அவரது சொல்லைத் தட்டாத வீரர்களும் இருக்க, இந்த இந்திய அணி, முந் தைய உலகக்கோப்பை ஆட்டங் களில் பங்கேற்ற வேறெந்த அணிக் கும், சற்றும் சளைத்ததல்ல என்றே எண்ணத்தோன்றுகிறது. அதனால், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x