தொடக்க போட்​டி​யில் 3 சிவப்பு அட்டை | FIFA WC 2026

தொடக்க போட்​டி​யில் 3 சிவப்பு அட்டை | FIFA WC 2026
Updated on
1 min read

மெக்​சிகோ சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணி​கள் மோதின. போட்டி​யின் இரண்​டாவது பாதி​யில் 49-வது நிமிடத்​தில் மெக்சிகோ வீரர் பிரையன் குட்​டிரெஸ் பந்​துடன் முன்​னேற முயன்ற​போது தென் ஆப்​பிரிக்க வீரர் ஸ்பெபெலோ சித்​தோல், அவரை முரட்​டுத்​தன​மாக ஃபவுல் செய்​தார்.

இதன் காரண​மாக சித்​தோலுக்கு களநடு​வர் நேரடி​யாக சிவப்பு அட்டை வழங்​கி​னார். இதனால் தென் ஆப்​பிரிக்க அணி 10 வீரர்களு​டன் விளை​யாடியது. தொடர்ந்து 84-வது நிமிடத்​தில் தென் ஆப்​பிரிக்க வீரர் தெம்பா ஸ்வானே, மெக்​சிகோ வீரர் ரொபர்ட்டோ ஆல்​வ​ராடோ​வின் முகத்​தில் தாக்​கி​னார்.

வீடியோ அசிஸ்​டண்ட் ரெஃப்ரி (விஏஆர்) மூல​மாக ஆய்வு செய்த நடு​வர் தெம்பா ஸ்வானேக்கு சிவப்பு அட்டை வழங்​கி​னார். இதனால் தென் ஆப்​பிரிக்க அணி 9 வீரர்​களு​டன் விளை​யாட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டது.

இதையடுத்து காயங்​களுக்​கான இழப்​பீடு நேரத்​தில் 90+2-வது நிமிடத்​தில்தென் ஆப்​பிரிக்​கா​வின் ஆபத்​தான பதில் தாக்குதலைத் தடுப்​ப​தற்​காக, அந்த அணி​யின் வீரர் குலிசோ முதாவை மெக்​சிகோ அணி​யின் தடுப்​பாட்​டக்​காரர் சீசர் மான்​டெஸ் ஃபவுல் செய்து கீழே தள்​ளி​னார். இதனால் சீசர் மான்​டெஸுக்கு சிவப்பு அட்டை காட்​டப்​பட்​டது.

உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் வரலாற்​றில் முதல் போட்டி​யிலேயே 3 சிவப்பு அட்​டைகள் வழங்​கப்​பட்​டது இதுவே முதன்​முறை​யாகும். கடந்த 2022-ம் ஆண்டு நடை​பெற்ற கத்​தார் உலகக் கோப்பை முழு​வதும் 4 சிவப்பு அட்​டைகள் மட்​டுமே வழங்கப்​பட்டு இருந்​தன.

இந்​நிலை​யில் தற்​போது முதல் ஆட்​டத்​திலேயே 3 சிவப்பு அட்டைகள் கொடுக்​கப்​பட்​டுள்​ளன. அதி​கபட்​ச​மாக 2006-ம் ஆண்டு போர்ச்​சுகல் - நெதர்​லாந்து அணி​கள் மோதிய ஆட்​டத்​தில் 4 சிவப்பு அட்​டைகள் வழங்​கப்​பட்​டிருந்​தன.தென் ஆப்​பிரிக்க வீரர் தெம்பா ஸ்வானேக்கு சிவப்பு அட்டை காண்​பித்த நடு​வர் வில்​டன் சம்​பாயோ.

தொடக்க போட்​டி​யில் 3 சிவப்பு அட்டை | FIFA WC 2026
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in