Last Updated : 07 Jan, 2015 11:58 AM

 

Published : 07 Jan 2015 11:58 AM
Last Updated : 07 Jan 2015 11:58 AM

டெஸ்டில் அதிக கவனம் செலுத்துவேன்: டேவிட் வார்னர்

சிட்னி டெஸ்டில் முதல் நாளன்று மிகச்சிறப்பாக ஆடி சதம் எடுத்தார் டேவிட் வார்னர். இதுபற்றி அவர் கூறியதாவது:

நான், டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக விளையாடுவதை எண்ணி ஒவ்வொரு நாளும் ஆச்சர்யமடைகிறேன். ஓய்வு பெறும் வரை, டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். இதைத்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் முன்னேற்றமாக கருதுகிறேன்.

டி20-ல் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். இன்னும் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டியில் விளையாட எண்ணுகிறேன். வருங்காலத்தில் எவ்வளவு காலம் ஐபிஎல்-லில் விளையாடுவேன் என்று தெரியவில்லை. இந்த வருடம் ஐபிஎல்-லில் ஆடுவேன். ஐபிஎல்-லில் தொடர்ந்து போட்டிகள் நடப்பதால் மிகவும் கடினமாக உள்ளது. ஐபிஎல்-லில் ஆடாவிட்டால் 6 வாரங்கள் ஓய்வு கிடைக்க வாய்ப்புண்டு. அடுத்த 5 வருடங்களுக்கு நான் செய்யவேண்டியவை குறித்து ஒரு திட்டம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் 15,000 மற்றும் 10,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். ஆனால் இப்போது உள்ளது போல டி20 ஆட்டங்களிலும் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. ஏதாவது ஒன்றை இழந்து கூடுதலாக 50 டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியுமா என்று பார்க்கிறேன். எக்காரணம் கொண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது என்று எண்ணுகிறேன். இந்த டெஸ்ட் போட்டியில் வாட்சனும் ஸ்மித்தும் அபாரமாக ஆடிவருகிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x