

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் பிப்ரவரி 14-ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரு கின்றன. இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், செல்டன் காட்ரெல், கிறிஸ்கெய்ல், தினேஷ் ராம்தின், கெமர் ரோச், ஆந்ரே ரஸ்ஸல், டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்துள்ள மைக்கேல் கிளர்க்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜார்ஜ் பெய்லி, பாட் கம்மின்ஸ், சேவியர் டோஹர்ட்டி, ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், ஜோஸ் ஹேஸில்வுட், மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அணிக்கு 43 வயதான தாகிர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானில் பிறந்த குர்ரம் கான் கேப்டனாக இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, தற்போதுதான் மீண்டும் உலகக்கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் விளையாடவுள்ளது. இந்த அணி, இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குர்ரம்கான், ஸ்வப்னில் பாட்டில், சாக்லைன் ஹைதர், அம்ஜத் ஜாவேத், ஷய்மன் அன்வர், அம்ஜத் அலி, நாஸிர் ஆசிஷ், ரோஹன் முஸ்தபா, மஞ்சுளா குருகே, ஆன்ட்ரி பெரங்கர், பஹக் அல் ஹாஸ்மி, முகமது நவீத், கம்ரான் ஷஷாத், கிருஷ்ணா கராட்டே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.