

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர் விருது ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆலன் பார்டர் பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கான போட்டியில் ஸ்மித் தவிர டேவிட் வார்னர், மிட்செல் ஜான்சன் ஆகியோரும் இருந்தனர். இதில் ஸ்மித்துக்கு 243 வாக்குகள் கிடைத்தனர். வார்னருக்கு 175 வாக்குகளும், ஜான்சனுக்கு 126 வாக்குகளும் கிடைத்தன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டி களிலும் தொடர்ந்து சதமடித்தார். அத்துடன் ஒருநாள் போட்டியில் தற்காலிக கேப்டனாக இருந்த அவர், களமிறங்கிய முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்தார்.
அவர் கேப்டனாக இருந்த போட்டிகள் எதிலும் ஆஸ்திரேலியா இதுவரை தோற்கவில்லை.