விளையாட்டு
கோலி என்னைக் கல்யாணம் பண்ணிக்குங்க! - இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கணையின் காதல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் டேனியல் வியாட் எனும் வீராங்கனை இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
22 வயதாகும் டேனியல் வியாட், சுழற்பந்து வீச்சாளராவார். அவர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கோலி என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார். டேனியல் வியாட் இங்கிலாந்து அணிக்காக 32 ஒருநாள் போட்டிகளிலும், 50 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது டி-20 உலகக்கோப்பைப் போட்டியில் இவர் விளையாடவில்லை.
அவரின் ட்வீட்டுக்கு பதிலளித் துள்ள சிலர், கோலி ஏற்கெனவே அனுஷ்கா சர்மாவுடன் சுற்றி வருகிறார் என கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.
