

திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னை அணியின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அணித்தலைவராக நடிகர் ஜீவாவும் துணைத் தலைவராக நடிகர் விஷ்ணு விஷாலும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை ரைனோஸ் உரிமையாளர் கங்கா பிரசாத், அணியின் இயக்குநர் ஜே.ஸ்ரீகாந்த் பாபு ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
சென்னை ரைனோஸ் அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், ஆர்யா, விக்ராந்த், ரமணா, பரத், ப்ரித்வி, சாந்தனு, அசோக் செல்வன், பாலாஜி, ஷாம், போஸ்வெங்கட், சரண் குமார், உதயகுமார், சஞ்சய் பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ், மும்பை ஹீரோஸ், வீர் மராட்டி, பெங்கால் டைகர்ஸ் , போஜ்பூரி தபாங்ஸ் ஆகிய அணிகள் பங்குபெறு கின்றன.