Last Updated : 29 Jan, 2015 02:37 PM

 

Published : 29 Jan 2015 02:37 PM
Last Updated : 29 Jan 2015 02:37 PM

அடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம்

2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதே போல் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2017-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4-27 ஆகிய தேதிகளூக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018-ஆம் ஆண்டு மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே.இ.தீவுகளில் நவம்பர் 2 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x