Last Updated : 17 Jan, 2015 12:28 PM

 

Published : 17 Jan 2015 12:28 PM
Last Updated : 17 Jan 2015 12:28 PM

கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள்

ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும்.

நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்.

மறக்கவே முடியாத தருணங்கள்

10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால் டெஸ்ட் போட்டிதான் என்றாலும் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தியது உலகக் கோப்பைப் போடித் தொடர்கள்தாம். இதில் ஆட்டத்தின் வண்ணங்கள் கூடுகின்றன. எல்லைகள் விரிவடைகின்றன. திறமைகள் புதிய பாய்ச்சலைக் காட்டுகின்றன. பழைய சாதனைகள் நொறுங்குகின்றன. ஒவ்வொரு ஆட்டமும் ஏதோ ஒரு விதத்தில் மறக்க முடியாததாய் ஆகின்றன. திகட்டாத அந்த நினைவு அருவியின் சாரலில் கொஞ்சம் நனைவோமா?

1975 இங்கிலாந்து

அது அந்தக் காலம்

இன்றைய இருபது ஓவர் ஆட்டத்தை அன்றே ஆடிய வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிட்... இறுதிப் போட்டியில் 85 பந்துகளில் லாயிட் விளாசிய 102 ரன்கள்...

சிறந்த கேப்டனாக அணியை வழி நடத்திய ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல்...

174 பந்துகள், வெறும் 36 ரன்கள்.... சுனில் கவாஸ்கரின் ஆமை வேக ஆட்டம்....

1979 இங்கிலாந்து

விரியும் எல்லைகள்

வித்தியாசமான ஆளுமையாக உருவெடுத்த அதிரடி சரவெடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ்...

கத்துக்குட்டி அணியான இலங்கையிடம்கூட தேறாத பரிதாப இந்தியா...

பலம் காட்டிய பாகிஸ்தான் அணி...

1983 இங்கிலாந்து

அதிசயம் அரங்கேற்றம்

இறுதி ஆட்டத்தில் விவியன் ரிச்சர்ட்ஸை வெளியேற்றிய கபில்தேவின் கேட்ச்...

ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவின் புலி பாய்ச்சல் ஆட்டம்... கபிலுக்குப் பரிசு தந்த வியூகம்...

ஜாம்பவான் வெஸ்ட்இண்டீஸ் மண்ணைக் கவ்விய பரிதாபம்.... இந்தியா கோப்பையை ஏந்திய பொன்னாள்...

1987 இந்தியா, பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்

ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா... அடங்கிப் போன இங்கிலாந்து....

ரிச்சர்ட்ஸை அழ வைத்த அப்துல் காதிர்...

கவாஸ்கரின் முதலும் கடைசியுமான ஒருநாள் போட்டி சதம்...

உலகக் கோப்பையில் சேட்டன் சர்மா எடுத்த முதல் ஹேட்ரிக்...

‘சிக்ஸர் சித்து’வாக உருவான பஞ்சாப் சிங்கம்...

1992ஆஸ்திரேலியா, நியூசி.,

பாகிஸ்தானின் விஸ்வரூபம்

வண்ணமயமாக மாறிய முதல் உலகக் கோப்பை...

பறவையாகப் பறந்து இன்சமாமைக் கொத்தி பெவிலியனுக்கு அனுப்பிய ஜாண்டி ரோட்ஸ்...

கிரண் மோரைக் கேலி செய்து ‘குரங்காக’ மாறிய ஜாவித் மியாண்டட்...

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய மழை...

பாகிஸ்தானைக் கரை சேர்த்த இன்சமாம் உல் ஹக்..

1996 ஆசியா

குட்டித் தீவின் எழுச்சி

சூறாவளியாக உருவான சனத் ஜெயசூர்யா...

இலங்கைக்கு எதிராக ஆட்டத்தைப் புறக்கணித்த ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ்...

சச்சின் டெண்டுல்கரின் அட்டகாசமான ஆட்டம்...

மனோஜ் பிரபாகரின் கிரிக்கெட் வாழ்க்கையை ‘முடித்துவைத்த’ ஜெயசூர்யா...

கத்துக்குட்டி கென்யாவிடம் மண்டியிட்ட வெஸ்ட் இண்டீஸ்...

சீண்டிய சோகைல்... சீறிய வெங்கடேஷ் பிரசாத்...

அரை இறுதியில் கலகக்காரர்கள் ஆன ரசிகர்கள்...

முன்னுதாரணமான தலைமையை வெளிப்படுத்திய அர்ஜூன ரணதுங்கா...

1999 இங்கிலாந்து

மீண்டும் ஆஸ்திரேலியா

சொதப்பிய இலங்கை... பரிதாப இந்தியா... அதிர்ஷ்ட ஆஸ்திரேலியா... துரதிர்ஷ்ட தென்ஆப்பிரிக்கா...

டெண்டுல்கரின் சோகம்... கரை சேரத் திணறிய இந்தியா...

கங்குலி - திராவிடின் சுனாமி ஆட்டம்...

ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றிய கிப்ஸின் கேட்ச்...

ஹீரோவாக மிளிர்ந்த லான்ஸ் குளூஸ்னர்... ஷேர்ன் வார்னின் சுழல் ஜாலம்...

2003 ஆப்பிரிக்கா

தொடரும் ஆதிக்கம்

போதைப் பொருளுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்த ஷேர்ன் வார்ன்...

ஜிம்பாப்வேயிக்கு இலவசமாகப் புள்ளி கொடுத்த இங்கிலாந்து...

சச்சின், கங்குலியின் நாலு கால் பாய்ச்சல்... சச்சனின் கிளாசிக் அப்பர் கட் சிக்ஸர்...

தென்னாப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்திய மழை... தவறாகக் கணக்குப் போட்ட ஷேன் பொல்லாக்...

அரையிறுதிக்கு முன்னேறி ஆச்சரியம் கொடுத்த கென்யா...

இறுதிப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ரிக்கி பாண்டிங்... எடுபடாமல் போன இந்தியா..

2007 மேற்கிந்தியத் தீவுகள்

அதிர்ச்சிகளின் சங்கமம்

முதல் சுற்றோடு மூட்டை கட்டிய இந்தியா, பாகிஸ்தான்... கத்துக்குட்டிகளிடம் வீழந்த ஜாம்பவான்கள்...

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்...

பெர்முடாவின் குண்டு மனிதர் டுவைன் லிவர்ராக்கின் பாய்ச்சல் கேட்ச்...

4 பந்துகள், 4 விக்கெட்டுகள்... யார்க்கர் ஹீரோ மலிங்காவின் புதிய சாதனை...

கிளைவ் லாயிட்டின் சாதனையைச் சமன் செய்த ரிக்கி பாண்டிங்...

2011 ஆசியா

மீண்டும் இந்தியா

எழுச்சி காட்டிய இந்தியா... புஜம் உயர்த்திய பாகிஸ்தான்...

இங்கிலாந்துக்குத் தண்ணி காட்டிய அயர்லாந்தின் ஓபிரயன்..

ரிக்கி பாண்டிங்கின் கனவைக் கலைத்த இந்தியா...

பந்திலும், மட்டையிலும் பலம் காட்டிய யுவ்ராஜ் சிங்...

மறக்க முடியாத தோனியின் இறுதியாட்ட சிக்ஸர்...

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கோப்பையை ஏந்திய தருணம்... சச்சினுக்கு மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்...

இப்படி உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் மறக்கவே முடியாததருணங்கள் இன்னும் ஏராளம்… ஒவ்வொரு நாளும் அந்த நினைவுகளுக்குள் மூழ்கி முத்தெடுப்போம். கிரிக்கெட் திருவிழாவைக் கொண்டாடுவோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x