

சந்தோஷ் கோப்பை கால்பந்து தெற்கு மண்டல தகுதிச் சுற்று போட்டியில் இன்று தமிழக அணி, புதுச்சேரி அணியை எதிர்கொள்கிறது.
தெற்கு மண்டல அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகளில் கேரளத்தில் ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் புதுச்சேரியை எதிர்கொள்கிறது. ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சர்வீசஸ் அணியை தமிழகம் எதிர்கொள் கிறது.
புதுச்சேரி அணி தனது முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சர்வீசஸ் அணியிடம் 8-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
முன்னதாக கடந்த 14-ம் தேதி சென்னையில் தமிழக அணியை தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்தது. அணி வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை சென்னை சிட்டி எப்.சி. அணியின் தலைவர் ரோஹித் ரமேஷ் வழங்கியுள்ளார்.அணியின் பயிற்சியாளராக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த நாராயண மூர்த்தி, மேலாளராக தமிழ்நாடு கால்பந்து சங்க துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன், பிசியோதெரபிஸ்டாக டாக்டர். ரகுநாத் மனோகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர்.
அணி வீரர்கள்: அஜ்மல், விக்னேஷ்வரன், பிரேம்குமார், ஆன்டனியஸ் சில்வா, ஹரிஹரன், சிவபிரியன், ஞானசேகரன், சந்தோஷ் குமார், ஜான் கார்லோ, பிரவேந்திரன், சுதாகர் (கேப்டன்) , விக்ரம் படேல், மிஜோ ஜோஸ், சூசைராஜ், ரீகன், அமீருதீன், எட்வின், ராஜ்குமார், சுரேஷ் குமார், சுராஜ் பகதூர்.