தெ.ஆப்பிரிக்க டி-20 அணியில் மீண்டும் ஜே.பி. டுமினி

தெ.ஆப்பிரிக்க டி-20 அணியில் மீண்டும் ஜே.பி. டுமினி
Updated on
1 min read

காயத்திலிருந்து மீண்டுள்ள தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஜீன் பால் டுமினி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான 14 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி அணியில் இடம்பெற வில்லை.

தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரும் 9-ம் தேதி தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். முக்கிய ஆட்டக்காரரான டுமினி, 14 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ள போதும், விளையாடுவது இறுதிக்கட்டத்தில் தான் உறுதி செய்யப்படும்.

மூன்றாவது போட்டியில் மட்டும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டுமினி மட்டுமின்றி, காயத்திலிருந்து மீண்டுள்ள இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆரோன் பங்கிசோவும் தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஹசிம் ஆம்லா, ஏ.பி. டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு இம்முடிவை தேர்வாளர்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போர்ட் எலிஸபெத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்த பாஃப் டூ பிளஸிஸ் டி-20 அணிக்கு கேப்டனாக இருப்பார்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்:

பாஃப் டூ பிளஸிஸ் (கேப்டன்), கெய்ல் அபோட், பர்ஹான் பஹ்ருதீன், மர்சன்ட் டி லாங், டுமினி, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், பர்னெல், ஆரோன் பங்கிசோ, காகிசோ ரபாடா, ரிலி ரொசவ், மோர்னே வான் விக், டேவிட் விஸி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in