

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அகில இந்திய அளவிலான பெடரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி தொடங்கியது.
பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை பர்கூர் கைப்பந்து கழகம் மூலம் அகில இந்திய அளவிலான பெடரேஷன் கப் கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி தொடங்கியது.
ஆண்கள் பிரிவு முதல் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 25--16, 25-21, 25-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்தியன் ரயில்வே அணியும், ராணுவ அணியும் மோதின. இதில் இந்தியன் ரயில்வே அணி 25-18, 25-22, 27-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
8 நாட்கள் மின்னொளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான நேற்று மாலை ஆண்கள் பிரிவில் கேரளா - பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் - இந்தியன் யுனிவர்சிட்டி அணியும், பெண்கள் பிரிவில் இந்தியன் ரயில்வே அணியும் - வெஸ்ட் பெங்கால் அணியும் மோதின.
மூன்றாவது நாளான இன்று (31-ம் தேதி) மாலை ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு - இந்தியன் யுனிவர்சிட்டி அணியும், இந்தியன் ரயில்வே - பஞ்சாப் அணியும், பெண்கள் பிரிவில் கேரளா - தமிழ்நாடு அணியும் மோதுகின்றன.