

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை சில முறை சந்தித்துள்ளார். அவ்வழியில் இன்று இந்திய கேப்டன் விராட் கோலியும் ரோஜர் பெடரரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இது குறித்து தன் ட்விட்டர் பதிவில் கோலி கூறும்போது, “இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாள், டென்னிஸ் மைதானத்திலும் வெளியேயும் ரோஜர் ஒரு மகத்தான வீரர்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தானும் பெடரரும் சேர்ந்து நிற்குமாறு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பெடரர் பிரிஸ்பன் ஓபனில் தனது 1,000-வது வெற்றியைப் பெற்றார்.
விராட் கோலி மட்டுமல்ல எந்தவொரு விளையாட்டையும் நேசிக்கும் ஆஸி. வீரர்களும் பெடரரை நன்கு அறிந்துள்ளனர். கேப்டன் ஸ்மித், பெடரரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
டேவிட் வார்னரும் பெடரருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.