

இருமுறை ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய முன்னாள் வீரர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புட் காலமானார். அவருக்கு வயது 88.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங் இன்று கொல்கத்தாவில் காலமானார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.
1948 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணியில் நடுக்கள வீரராக ஜஸ்வந்த் சிங் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.