Published : 24 Jan 2015 01:24 PM
Last Updated : 24 Jan 2015 01:24 PM

பீச் வாலிபால் :பொள்ளாச்சி பள்ளி வெற்றி

தூத்துக்குடியில் நடைபெற்ற 17-வயதுக்குட்பட்டோருக்கான மாநில பீச் வாலிபால் போட்டியில் பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதி ஆட்டத்தில் நாமக்கல் ஆர்.என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி அணியை 21-17, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் என்.ஜி.என்.ஜி. பள்ளி அணி வென்றது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை சார்பில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற சபரிஸ்குமார் 17-வயதுக்குட்பட்டோருக்கான தமிழக பீச் வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x