மும்பை இண்டியன்ஸுடன் பயிற்சி மேற்கொண்டார் சச்சின்

மும்பை இண்டியன்ஸுடன் பயிற்சி மேற்கொண்டார் சச்சின்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது மகன் அர்ஜுனும் அவருடன் இருந்தார்.

கடந்த ஆண்டு வரை மும்பை இண்டியன்ஸ் அணியில் சச்சின் இடம் பெற்றிருந்தார். சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு சச்சின் விளையாடவில்லை.

இந்நிலையில் துபையில் உள்ள ஐசிசி அகாதெமி மைதானத்துக்கு சனிக்கிழமை வந்த சச்சின், அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்களுக்கு பந்து வீசினார்.

இந்திய அணியிலும், மும்பை இண்டியன்ஸ் அணியிலும் சச்சின் 10 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். சச்சின் ஓய்வு பெற்றதை அடுத்து அவர் அணிந்து விளையாடிய 10-வது என் ஜெர்ஸிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணி ஓய்வு கொடுத்துவிட்டது. அந்த எண் கொண்ட ஜெர்ஸி வேறு எந்த வீரருக்கும் வழங்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in