சென்னை ஓபன்: பாலாஜி - நெடுஞ்செழியன் தோல்வி

சென்னை ஓபன்: பாலாஜி - நெடுஞ்செழியன் தோல்வி
Updated on
1 min read

ஏர்செல் சென்னை ஓபன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் ரோஜர் வேஸ்லின் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளது.

20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வேஸ்லின் - லக்ஸம்பர்கை சேர்ந்த ஜில்ஸ் முல்லர் இடையே நடந்த பரபரப்பான முதல் சுற்று ஆட்டத்தில், 6-7, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் முல்லர் வெற்றி பெற்றார்.

31 வயது ரோஜர் வேஸ்லின் சென்ற ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபன் போட்டியில் இறுதிச்சுற்று வரை தகுதி பெற்றார். இந்நிலையில் இந்த வருட சென்னை ஓபன் போட்டியில் வேஸ்லின், முதல் சுற்றிலேயே தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், ஆண்டிரியாஸ் ஹைடர், மார்செல் கிரானோலர்ஸைத் தோற்கடித்தார்.

இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சன் லூ, ஜோனதன் மேரே ஜோடியுடன் மோதியது. இதில் 3-6, 6-4, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.

நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில், லுகா வன்னி, அல்ஜாஸ், டான்ஸ்காய், விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சுந்தர் பிரசாந்த், உக்ரைனின் மர்சென்கோவை 2-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in