

உலகக்கோப்பை போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் காயமடைந்துள்ள லஷித் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
அதாவது, உடற்தகுதியில் தேறினால் அவர் விளையாடலாம் என்ற நிபந்தனை அடிப்படையில் மலிங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
15 வீரர்கள் கொண்ட இலங்கையின் உலகக் கோப்பை அணி வருமாறு:
அஞ்சேலோ மேத்யூஸ் (கேப்டன்), திலகரத்ன தில்ஷன், குமார் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனே. லாஹிரு திரிமன்ன (துணை கேப்டன்), தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னே, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, சுரங்க லக்மல், லஷித் மலிங்கா (உடற்தகுதி பெற்றால்), தம்மிக பிரசாத், நுவன் குலசேகரா, ரங்கன்னா ஹெராத், சசித்ர சேனநாயக.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 29-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றனர்.
பிப்ரவரி 14-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை களமிறங்குகிறது. இந்தப் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது.
பிரிவு ஏ-யில், இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.