சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் அல்ஜாஸ்

சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் அல்ஜாஸ்
Updated on
1 min read

பரபரப்பாக நடைபெற்று வரும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பிடென் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டாவை வென்றார். இந்த அரையிறுதி ஆட்டம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்தது.

இதில் இருவரும் சளைக்காமல் போராடினர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பவுடிஸ்டா வென்றார். இதையடுத்து 2-வது செட்டில் அல்ஜாஸ் ஆக்ரோஷமாக விளையாடினார். அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் அல்ஜாஸ் வென்று பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து 3-வது செட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். எனினும் கடைசி கட்டத்தில் அல்ஜாஸின் கை ஓங்கியது. அவர் 7-6 என்ற கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றி ஆட்டத்தில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in