

அடிலெய்டில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயலாற்றுவார். தோனி நாளைய டெஸ்டில் இடம்பெறமாட்டார்.
"நான் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பு வகிக்கிறேன். தோனி அடுத்த சில நாட்களில் 100% உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
இது எனக்கு மிகப்பெரிய தருணம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது என் கனவு, ஆனால் தற்போது இந்திய அணியை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார் கோலி.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் கணுக்கால் காயம் காரணமாக ஞாயிறன்று பயிற்சியில் விளையாடவில்லை. நாளை காலை இவரது உடற்தகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இவர் விளையாடுவது முடிவு செய்யப்படும் என்றார் கோலி.
இந்திய அணி விளையாடும் அனைத்து இருதரப்பு டெஸ்ட் போட்டிகள் போலவே இந்தத் தொடரிலும் டி.ஆர்.எஸ். முறை இல்லை. அது 100% துல்லியமாக இருக்கும் போது அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இப்போது அவுட்டை நாட் அவுட் என்கிறது, நாட் அவுட்டை அவுட் என்கிறது ஆகவே டி.ஆர்.எஸ் தானும் ஏற்கவில்லை என்று கூறினார் விராட் கோலி.