Published : 15 Dec 2014 03:21 PM
Last Updated : 15 Dec 2014 03:21 PM

ரஞ்சி போட்டி: தமிழகத்தை காத்த ரங்கராஜன்

தமிழ்நாடு – ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய தமிழ்நாடு – ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்த தமிழகம், தொடர்ந்து விக்கெட்டு களை இழந்ததால் 80.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

8-வது வீரராக களமிறங்கிய ரங்கராஜன் 75 பந்துகளில் 3 சிக்ஸர் 14 பவுண்டரிகள் உள்பட 93 ரன்கள் குவித்ததால் தான் தமிழகத்தால் ஓரளவு நல்ல ஸ்கோரை எடுக்க முடிந்தது. ஜம்முவின் வாசீம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஜம்மு காஷ்மீர், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. பந்தீப் சிங் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x