

மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் ஒரு வீரராக பாண்டிங் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் ரைட்டுக்கு பதிலாக பாண்டிங் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான பாண்டிங், அந்த அணிக்கு இருமுறை உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். அக்காலகட்டத்தில் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராகவும் அறியப்பட்டார். 39 வயதாகும் பாண்டிங் ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர். 168 டெஸ்ட், 357 ஒருநாள் கிரிக்கெட், 17 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.