சாம்பியன்ஸ் டிராபியை வென்றது ஜெர்மனி: இந்தியாவுக்கு 4-வது இடம்

சாம்பியன்ஸ் டிராபியை வென்றது ஜெர்மனி: இந்தியாவுக்கு 4-வது இடம்
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

ஒடிஸா தலைநகர் புவனேசுவரத் தில் நேற்று நடைபெற்ற சாம்பி யன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பலமான ஜெர்மனி அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. ஆரம்பம் முதல் ஜெர்மனி வீரர்கள் அட்டகாசமாக ஆடினார்கள். 18-வது நிமிடத்தில் ஜெர்மனி முதல் கோலடித்தது. இந்த கோலை வெஸ்லி அடித்தார். பிறகு 57-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது ஜெர்மனி.

இந்த கோலை ப்ளோரியன் அடித்தார். இறுதிவரை போராடியும் பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் டிராபியை வென்றுள்ளது ஜெர்மனி.

இந்தியாவுக்கு 4-வது இடம்

3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-1 என்கிற கோல் கணக்கில் ஆஸி. வெற்றியடைந்தது. இந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் எடி ஒகென்டென் கோலடித்தார். ஆனால் 42-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது இந்தியா. இந்த கோலை லலித் உபாத்யாய் அடித்தார். இதையடுத்து 52–வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 2-வது கோலை அடித்தது. இந்த கோலை மேட் கோட்ஸ் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இப்போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணிக்கு 4-ம் இடம் தான் கிடைத்தது.

போட்டியின் முடிவுகள்

1. ஜெர்மனி

2. பாகிஸ்தான்

3. ஆஸ்திரேலியா

4. இந்தியா

5. நெதர்லாந்து

6. அர்ஜெண்டினா

7. இங்கிலாந்து

8. பெல்ஜியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in